வெளிநாட்டவர்களால் இணையத்தாக்குதல் நிகழ்வது சாதாரணமாகி விட்டது: சான்

வெளிநாட்டு நபர்களால் இணையத் தாக்குதல் நிகழ்வது இப்போது சாதாரணமாகி விட்டது என்பதால், சிங்கப்பூர் தனது சமூக, மனோ வியல் தற்காப்புகளைப் பலப் படுத்தி, அதன் மூலம் கடுமையான பாரம்பரிய மிரட்டல்களைப் போல மின்னிலக்க மிரட்டல்களை எதிர் கொள்ள வேண்டும் என்று வர்த் தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
பொருளியலை சீர்குலைத்து, சமூக ஒற்றுமையைக் கீழறுத்து, சிங்கப்பூரின் அடிப்படை நம்பிக்கை களையும் கடப்பாடுகளையும் இலக் காகக் கொண்டு எதிரிகள் மின் னிலக்க முறையில் சிங்கப்பூரைத் தாக்கக்கூடும் என்று திரு சான் எச்சரித்தார்.
ஆசிய பசிபிக் மூத்த ராணுவ அதிகாரிகளின் முன்னாள் மதிப்புக்குரிய பேச்சாளர் தொடரில் நேற்று திரு சான், 1984ல் அறி முகப்படுத்தப்பட்டதிலிருந்து முழு மைத் தற்காப்பு எவ்வாறு பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்று தமது உரையில் விவரித்தார்.
“மிரட்டல்கள் இப்போது அதி நவீனமாக, சிக்கலானதாக, பன் முனைத் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வெளி நாட்டு நபர்கள் பொருளியல், கலா சார, தகவல் அல்லது அரசதந்திர வழிகளில் தங்கள் மிரட்டல்களை விடுக்க முடியும்.
“குறைந்த காலத்தில் பணத் தைப் பெறும் சலுகைத் திட்டத்தால் நம்மை ஏமாற்றுதல், அல்லது மிரட்டல்கள் மூலம் நம்மை அச்சம் கொள்ள வைத்தல் போன்ற செயல்களை அவர்கள் இணையம் மூலம் எளிதாகச் செய்யலாம்.
என்றும் கூறினார் திரு சான்.