சிங்கப்பூரருக்கான ஆதரவு, வர்த்தக வாய்ப்புகள்ஆகியவை பட்ஜெட்டின் முக்கியஅம்சங்கள்

பொருளியல் மறுசீரமைப்பு சூழ் நிலையில் சிங்கப்பூரர்களுக்கான ஆதரவு, வர்த்தக வாய்ப்புகள், அனைவரையும் உள்ளடக்கிய பரிவுள்ள இல்லமாக சிங்கப்பூரை ஆக்குவது போன்றவை பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறவுள்ள கருப்பொருள்களில் சில என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள் ளார்.
அமைச்சர் ஹெங் அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்கத் தின் வரவு செலவுத் திட்ட அறிக் கையை வரும் திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுவார்.
உலகளாவிய நிலைத்தன்மை யுடன் உள்நாட்டுச் சவால்களை யும் சிங்கப்பூர் எதிர்நோக்குகிறது என்றும் அது இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என் றும் திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார்.