சிங்கப்பூரில் சிஸ்கோவின்தென்கிழக்கு ஆசிய இணை புத்தாக்க நிலையம்

தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, இணையப் பாதுகாப்பு தொடர்பான வட்டார விவகாரங்களில் பணியாற்ற தனது முதலாவது தென்கிழக்காசிய இணை புத்தாக்க நிலையத்தை சிங்கப்பூரில் திறந்திருக்கிறது.
மேலும் அந்நிறுவனம், ஆசிய பசிபிக் மிரட்டல் உளவியல் ஆய்வு மற்றும் பாதுகாப்புச் சம்பவம் பதில் நடவடிக்கை ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள அதன் சிஸ்கோ இணையப் பாதுகாப்பு உன்னத நிலையத்தையும் (சிசிஎக்ஸ்) இங்கு அமைத்துள்ளது.
‘சிசிஎக்ஸ்’ நிலையத்தில் புதிய மிரட்டல் உளவியல் தலைமையகமும் பாதுகாப்பு நடவடிக்கை மையமும் அடங்கி இருக்கும். அரசாங்கத்துடனும் தொழில்துறையினருடனும் பல்கலைக்கழகங்களுடனும் பங்காளித்துவத்தை ஏற்படுத்தி சிங்கப்பூரில் தேசிய இணையப் பாதுகாப்பையும் திறனாளர் களையும் மேம்படுத்தும் என்று சிஸ்கோ தெரிவித்தது.
இணைப் புத்தாக்க நிலையமும் ‘சிசிஎக்ஸ்’ நிலையமும் ‘மேப்பல்ட்ரீ’ வர்த்தக நகரில் உள்ள சிஸ்கோ அலுவலகத் தில் அமைந்திருக்கும்.