2018ல் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி 3.2%

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி சென்ற 2018ஆம் ஆண்டு 3.2 விழுக்காடாக இருந்தது என்று நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரத் தகவல் கூறுகிறது.
பொருளியல் பதற்றமும் தன் னைப்பேணித்தனமும் உலகில் அதிகரித்த சென்ற ஆண்டின் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி 2017ஆம் ஆண்டு இருந்த 3.9 விழுக்காட்டைவிட குறைந்து காணப்பட்டது.
இவ்வாண்டு வளர்ச்சி 1.5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக் காட்டுக்குள்  இருக்கும் என்றும் பொருளியலில் பதற்றநிலை சென்ற ஆண்டு கடைசி காலாண் டில் அதிகரித்துள்ளதாகத் தெரி வித்தது.
அத்துடன், சீனப் பொருளியல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேக மாக மெதுவடைந்து வருவதும் சீன-அமெரிக்க வர்த்தக மோதல் அதிகரித்து வருவதும் சிங்கப்பூர் பொருளியலை கீழே கொண்டு செல்வதாக வர்த்தக, தொழில் அமைச்சு கூறுகிறது.
அமைச்சு வெளியிட்டுள்ள காலாண்டு பொருளியல் ஆய்வு அறிக்கையில் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறு வதும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என அந்த அறிக்கை தெளிவுபடுத்தியது.
“பிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் நீண்டுகொண்டே போவதால், நிச்ச யமற்ற நிலைமை உருவாகி
உள்ளது. 
“இது பிரிட்டனுக்கும் அதன் வர்த்தகப் பங்காளி நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கக் கூடும்,” என்று அமைச்சின் நிரந்தரச் செயலாளர் லோ கம் இயன் தெரிவித்தார்.