கடந்த காலங்களின் எதிர்கால விழா அறிமுகம்

சிங்கப்பூரின் கடந்தகால நிகழ்வு களை நினைவுகூரும் பலருக்கும் தெரியாத கதைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு மாத விழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
அதில் 11 வகையாக நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள யேல்-என்யுஎஸ் கல்லூரி தெரிவித்தது. இவ்விழா வுக்கு சிங்கப்பூர் 200வது ஆண்டு நிறைவு அலுவலகம் ஆதரவளிக்கிறது.
‘சாரோங் பார்டி’ எனும் இசை நிகழ்ச்சி சிங்கப்பூர் காலனித் துவ காலத்தை எடுத்துரைக்கும். 
பினாங்கு, மலாக்கா. சிங்கப் பூர் ஆகிய ஸ்ட்ரெய்ட்ஸ் குடியிருப் புகளில் வாழ்ந்த பல்வேறு சமூகங் களின் வாழ்க்கை வரலாறு, 1800ஆம் ஆண்டுகளின் வர்த்தகரான ‘தெமங்கோங்’ என்ற முறையில் நீங்கள் இரவு வேளை யில் புதையல்களைத் தேடுதல் போன்ற விளையாட்டுகளும் இருக்கின்றன.
இதர அம்சங்களாக, இந்த ஆண்டு மெரிடியன் தொடக்கக் கல்லூரியுடன் இணைவதற்கு முன்பிருந்த தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரியைப் பற்றிய விளக் கப்படம், மலேசிய இலங்கைத் தமிழரும் சீன அமெரிக்க நங்கையும் கலப்பின தம்பதிகளாக வாழ்ந்த கதையைச் சித்திரிக்கும் விளக்கப்படம் ஆகியவற்றைக் கூறலாம்.