விரைவில் பெரிய அஞ்சல் பெட்டிகள் 

மின் வர்த்தகத்துக்கு ஏற்ற பெரிய அளவிலான அஞ்சல் பெட்டிகள், கண்டுபிடிக்க முடி யாத பொருட்களுக்கான பொறுப் புடைமை முதலிவை எதிர்காலப் பிரச்சினைகளுக்குரிய சிங்போஸ் நிறுவனத்தின் தீர்வுகளாக இருக் கும் என்று அந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாகி போல் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் பெட்டிகளின் மற்றும் கடிதங்களைப் போடும் அதன் இடைவெளிகளின் அளவை அதிகரிக்கும் சாத்தியத்தை சிங் போஸ்ட் சம்பந்தப்பட்ட அமைப்புக ளிடமும் தனது பங்காளித்துவ அமைப்புகளுடனும் விவாதித்து வருகிறது என்றும் திரு கோட்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன் னார்.
“வாடிக்கையாளர் ஒருவரது நான்கு, ஐந்து பொட்டலங்கள் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தால் அவற்றை அந்த அஞ்சல் பெட்டிக்குள் சேர்ப்பிக்க சிரமமாக இருக்கும்,” என்றும் திரு கோட்ஸ் விவரித்தார்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப குடியிருப்புப் பேட்டைகளின் அஞ்சல் பெட்டிகளின் உட்புற அளவு, 110 மில்லிமீட்டர் நீளம், 270 மில்லி மீட்டர் அகலம், 380 மில்லி மீட்டர் உயரம்.