உணவு விரயமாவதைக்  குறைக்க ஓராண்டு முயற்சி

சிங்கப்பூரில் உணவு விரயமாவ தைக் குறைப்பதற்காக ஓராண்டு கால இயக்கத்தை தேசிய சுற்றுப் புற வாரியம் தொடங்கி இருக் கிறது. சிங்கப்பூரில் மிக அதிகமாக விரயமாகும் பொருட்களில் உணவு ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
மக்கள் வீட்டுக்கு வெளியே சாப்பிடும்போது எளிய மூன்று பழக்கவழக்கங்களைப் பின்பற்றி னால் உணவு தேவையில்லாமல் விரயமாவதைக் குறிப்பிடத்தக்க அளவு குறைத்துவிடலாம் என்று வாரியம் நம்புகிறது. 
‘அறவே விரயமற்ற ஆண்டு’ என்று குறிப்பிடப்படும் அந்த  இயக்கத்தின் ஓராண்டு கால முயற்சிகளை சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று ஈசூன் பார்க் உணவங்காடி நிலையத்தில் தொடங்கிவைத்தார். 
சாப்பிட்டு முடிக்க முடியும் என்றால் மட்டுமே கடைகளில் உணவு கொடுக்கும்படி கேளுங்கள்; குறிப்பிட்ட அளவுக்குச் சாப்பிட இயலாது என்றால் குறைந்த அளவு சாதம் போதும் என்று கேளுங்கள்; நீங்கள் சாப்பிடமாட்டீர்கள் என்றால் அத்தகைய பதார்த்தங்களை வேண்டாம் என்று நிராகரித்து விடுங்கள். 
இந்த மூன்று பழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு அந்த இயக்கம் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறது. இந்த வாரியம் 25 உணவங்காடி நிலையங்களில் மக்களை எட்டும். 
அதோடு ஷெங் ‌ஷியோங் பேரங்காடி, பிரைம் பேரங்காடி போன்ற அமைப்புகளையும் இந்த வாரியம் எட்டும். பள்ளிக்கூடங்கள், உயர்கல்வி நிலையங்களில் இந்தத் தகவல்களை வாரியம் பரப்பும்.