பரம்பரை உணவுத் தொழில்களின் கதைகளை எடுத்துரைக்கும் நூல்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற 10 பரம்பரை உணவுத் தொழில்களுக்குப் பின்னால் உள்ள கதைகள் புதிய நூல் ஒன்றில் இடம்பெறுகின்றன. இந்த பத்து உணவகங்களில் சில  1920ஆம் ஆண்டிலிருந்து பரம்பரைத் தொழிலாக நடத்தப் பட்டு வருகின்றன. 
அவற்றில் மூன்று இந்திய உணவகங்களும் அடங்கும். இஸ் லாமிக் உணவகம், முத்து’ஸ் கறி, சாமி’ஸ் கறி ஆகியன அவை. ‘ஃபேட்டி வெங்’, ‘குவான் ஹோ சூன்’, ‘ஹுவாட் ஹீ’, ‘சுவீ கீ’, ‘மிங் சுங்’, ‘சபார் மெனாந்தி’, ‘ஸ்பிரிங் கோர்ட்’ ஆகியவை இதர ஏழு உணவகங்கள்.
‘டெலி‌ஷியஸ் ஹேர்லூம்ஸ்’ எனும் தலைப்பைக் கொண்டுள்ள இந்த நூலை எழுதியவரான ஓவ் கிம் கிட், ஒரு வழக்கறிஞர்.  அடுத்த ஆண்டிற்குள் குறைந் தது 50 வயதை எட்டும் பரம்பரை உணவுத் தொழில்களின் கதை களை வெளிக்கொணர அவர் விரும்பினார்.
தங்கள் தாயகத்திலிருந்து சிங்கப்பூருக்கு குடியேறிகளாக வந்த இந்த உணவகங்களை நிறு வியவர்கள், அப்போது அவர்கள் எதிர்நோக்கிய சவால்களை இந்த நூல் நினைவுகூருகிறது. அவர்கள் எவ்வாறு சிங்கப்பூர் சமையற்கலையை வெற்றிகரமாக உருவாக்கினர் என்பது குறித்த தகவலும் நூலில் இடம்பெறுகிறது. ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ பதிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த நூல், புத்தகக் கடைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நூலுக்கு தேசிய மரபுடை மைக் கழகம் ஆதரவு அளித்துள்ளது.
தொடர்பு, தகவல் மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சரான சிம் ஆன் தேசிய நூலகத்தில் நேற்று இந்த நூலை வெளியிட்டார்.

Loading...
Load next