புதிய வழிகாட்டிகள் அறிமுகம்

மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளும் பெற்றோர்களும் எவ்வாறு இணைந்து பணியாற்ற லாம் என்பது பற்றிய புதிய வழி காட்டிகளைக் கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கும் பெற்றோர்க ளுக்கும் இடையே நல்லதொரு பங்காளித்துவத்தை உருவாக்கு வது தொடர்பான குறிப்புகள் அந்த வழிகாட்டிகளில் அடங்கும்.
கல்வி அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம் மது ஃபைசால் இப்ராஹிம் நேற்று யூ நெங் தொடக்கப்பள்ளியில் அந்த வழிகாட்டிகளை வெளியிட் டார்.
சுய நிர்வாகத் திறன், மீள்திறன், கற்றல் தொடர்பான பொறுப்பை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட முக் கிய அம்சங்களை அந்த வழி காட்டிகள் வலியுறுத்துகின்றன.
மாணவர்களிடையே கற்றல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தவும் வாழ்நாள் கற்றலின் முக்கியத்து வத்தை வலியுறுத்தவும் கல்வி முறையில் அமைச்சு பல மாற்றங் களைச் செய்து வருகிறது.
அந்த வகையில் பள்ளிகளுக் கும் பெற்றோர்களுக்கும் இடையே யான ஆக்கபூர்வமான, அர்த்த முள்ள பங்காளித்துவம், கல்வி முறையில் செய்யப்பட்டு வரும் இந்தப் புதிய மாற்றங்களின் மூலம் மாணவர்கள் பலனடைவதை உறுதிசெய்யும் என்று டாக்டர் ஃபைசால் கூறினார்.
பள்ளிகளுடனும் பெற்றோர் களுடனும் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் வழிகாட்டிகள் உருவாக்கப் பட்டன.
தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிகளிலிருந்து பெற்றோர்கள் அந்த வழிகாட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!