மலேசியாவிற்கு வரும் சிங்கப்பூர் சுற்றுப்பயணிகளின் விகிதம் 14% சரிவு

மலேசியாவிற்குச் செல்லும் சிங்கப்பூர் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 14 விழுக்காடு குறைந்தது. அதே வேளையில், ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேராத சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 20 கூடியது.
இது குறித்து மேல் விவரங்களைத் தமது அமைச்சு கூடிய விரைவில் வெளியிடும் என்று மலேசியாவின் சுற்றுப்பயணம், கலைகள், கலாசாரத்துறை துணை அமைச்சர் முகம்மது பாக்தியார் வான் சிக் தெரிவித் தார்.
சுற்றுப்பயணத்துறை சந்தை யில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், இவ்வாண்டு மலேசியாவிற்கு 30 மில்லியன் சுற்றுப்பயணிகள் வந்துசெல்வர் என்ற இலக்கை எட்ட முடியும் எனத் தாம் நம்புவ தாக அவர் கூறினார்.
சோதனைச் சாவடிகளில் நிலவிய போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் சிங்கப்பூர் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.
இதற்கிடையே, சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதில் ஆசியானின் மற்ற உறுப்பு நாடுகளும் மலேசியாவிற்குப் போட்டி தருவதாக திரு முகம்மது பாக்தியார் சொன்னார்.