ஆலோசனைக் கடிதங்கள்

ஆர்ச்சர்ட் சாலையில் புகைப்பிடிப் பதற்கான தடை இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வந்ததையடுத்து, புகைப்பிடிப்பதற்காக ஒதுக்கப் பட்டு உள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் புகைப்பிடித்தோரிடம் வழங்கப் பட்ட ஆலோசனைக் கடிதங் களின் எண்ணிக்கை 60 விழுக் காடு குறைந்துள்ளது.
ஆறு வாரங்களுக்கு முன்ன தாக நாள் ஒன்றுக்கு சுமார் 1,900 ஆலோசனைக் கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தது தேசிய சுற்றுப்புற வாரியம். கடந்த வாரம் அந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரியாக 170ஆக குறைந்தது. 
கடந்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 10 தேதி வரை 42,600க்கும் மேற் பட்ட கடிதங்கள் வழங்கப்பட்டன.