7,700 பேருக்கான சாஸ் மானியம் கணக்கீடு தவறு

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்ட அட்டைக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங் களில் விண்ணப்பித்த அல்லது புதுப் பித்த சுமார் 7,700 பேர் சரியாகக் கணக்கிடப்படாத சுகாதாரப் பராமரிப்பு மானியங்களைப் பெற்று இருக்கிறார்கள். கணினி முறையில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. என்சிஎஸ் நிறுவனம் நிர்வகித்து நடத்தும் கணினி முறை, அந்த 7,700 பேருக்கு உரிய மானியங்களைத் தவறாகக் கணக்கிட்டுவிட்டது என்று அமைச்சு விளக்கியது. இந்த எண்ணிக்கை, சாஸ் அட்டை வைத்துள்ள அனைவரோடும் ஒப்பிட்டு பார்க்கையில் சுமார் 17% ஆக இருக் கிறது. அட்டைகளுக்காகவும் அட்டை களைப் புதுப்பிப்பதற்காகவும் செய்யப் பட்ட விண்ணப்பங்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மானியங்கள் நேற்று சரிப்படுத்தப்பட்டு விட்டதாக அமைச்சு குறிப்பிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எந்தவிதச் செயலையும் செய்யவேண்டிய தேவை இல்லை என்றும் அமைச்சு கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்

24 Mar 2019

இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி

அட்மிரல்டி பிளேஸ் கடைத் தொகுதியில் உள்ள தற்போதைய சந்தை உட்லண்ட்ஸ் ஈஸ்ட் அக்கம்பக்க போலிஸ் மையத்துக்குப் பக்கத்தில் உள்ள இடத்துக்கு மாறுவது பற்றிய தகவலை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் சுற்றறிக்கையில் தமிழுக்குப் பதிலாக தவறுதலாக இந்தி மொழி அச்சடிக்கப்பட்டு இருந்தது. படம்: விஜயா கந்தசாமி ஃபேஸ்புக்

24 Mar 2019

சுற்றறிக்கையில் தமிழ் என்று எண்ணி தவறுதலாக இந்தி மொழி