பட்ஜெட்: செலவினம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

பட்ஜெட்: செலவினம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

1 mins read
Google News Preferred Icon

இன்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்கிறார். இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு, பொருளியல் உருமாற்றம், மெர்டேக்கா தலைமுறை தொகுப்புத் திட்டம் போன்றவற்றில் கவனம் செலுத் தப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் செலவினம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகப் பொருளியல் நிபுணர்கள் எதிர் பார்க்கின்றனர். அதே சமயத்தில் வரவுசெலவுத் திட்டம் உபரியையும் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. "இந்த அரசாங்கத்தின் நான்காவது ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைக்கிறோம். ஆட்சிக்கு வந்ததும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது இயல்பு. அதன் பிறகு, சேமிக்கப் பட்ட உபரித் தொகைகளைக் கொண்டு செலவினத்துக்காகக் கூடுதல் நிதியை அரசாங்கம் ஒதுக்கும்," என்று நிதி மற்றும் வர்த்தக, தொழிலுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திரு லியாங் எங் ஹுவா கூறினார்.