2020 நடுப்பகுதிக்குள் தொகுதி உலாக்கள் பூர்த்தி

அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள்  அமைச்சர்களின் தொகுதி உலாக்கள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் அமைச்சர்கள் 90 தொகுதி உலாக்களை மேற் கொள்ள இருக்கின்றனர். இது வரை அவர்கள் ஏறத்தாழ 30 தொகுதி உலாக்களை நடத்தி முடித்துள்ளனர்.
தொகுதிவாசிகளின் உணர்வு களை நேரில் சென்று தெரிந்து கொள்ள இந்தத் தொகுதி உலாக்கள் நடத்தப்படுகின்றன.
இந்தத் தொகுதி உலாக்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கின. வாரந்தோறும் நடைபெறும் இந்தத் தொகுதி உலாக்களைக் கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஒருங்கிணைத்து வருகிறார்.
இளம் அமைச்சர்களின் தொகுதி உலாக்கள் திட்ட மிட்டபடி நடந்து வருவதாக திரு ஓங் தெரிவித்தார்.
“இதுவரை கிட்டத்தட்ட 30 தொகுதி உலாக்களை நடத்தி விட்டோம். இன்னும் 60 தொகுதி உலாக்கள் எஞ்சியுள்ளன.
“கடுமையாக உழைத்தால் ஓராண்டு மூன்று மாதங்களில் தொகுதி உலாக்களை முடித்து விடலாம்.
“ஒவ்வொரு வாரமும் நாங்கள் தொகுதிகளுக்குச் செல்கிறோம். எங்கள் வருகையைக் கண்டு குடியிருப்பாளர்கள் சில சமயங் களில் ஆச்சரியம் அடை கின்றனர். நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். இதனால் பொதுமக்களின் கவலைகள், அக்கறைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது,” என்று செங்காங் சென்ட்ரலில் நேற்று தொகுதி உலா சென்றபோது செய்தியாளர் களிடம் திரு ஓங் தெரிவித்தார்.
செங்காங் சமூக மன்றத்துக்கு அவருடன் கலாசார, சமூக, இளையர் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், உள்துறை மற்றும் சுகாதார அமைச்சுகளுக் கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், போக்குவரத்து மற்றும் கலாசார, சமூக, இளையர் அமைச்சு களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் ஆகியோர் சென்றிருந்தனர்.