கல்வி முறை மேம்பாட்டில் ஆயுள் கல்வியும் இலக்கு

சிங்கப்பூரில் கல்வி முறையை மேம்படுத்தும் தன் முயற்சிகளில் மூன்றாவது அம்சமாக ஆயுள் கல்வியைச் சேர்க்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. 
ஆயுள் முழுவதும் சிங்கப்பூரர்கள் புதுப்புது தேர்ச்சிகளையும் ஆற்றல்களை யும் கற்றுக்கொள்வதை உறுதிப்படுத்து வது இதன் நோக்கம். கல்வி முறை மேம்பாட்டில் ஏற்கெனவே இரண்டு நட வடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான தேர்வுச் சுமை யைக் குறைப்பது அவற்றில் ஒன்று. 
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவ பல அமைப்புகளை உள்ளடக்கும் சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைப்பது மற் றொரு நடவடிக்கை. 
கல்வி அமைச்சர் ஓங் யி காங் நேற்று செங்காங் மத்திய பகுதிக்குச் சமூக சுற்றுலா மேற்கொண்டார். அதனையொட்டி இந்த விவரங்களை அமைச்சர் தெரிவித்தார். 

கல்வி முறை மேம்பாட்டில் இடம் பெறும் புதிய அம்சம், மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அது பல ஆண்டு கால முயற்சியாகும். அதன்மூலம் கல்வி முறை கணிசமாக மேம்படும் என்று தெரிவித்த அமைச்சர், இன்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததற்குப் பிறகு மேல் தகவல்கள் பலவும் வெளியிடப்படும் என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள செயிண்ட் அந்தோணியர் தேவாலயத்திற்கு வெளியே நிற்கும் கிறிஸ்தவ மதபோதகர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Apr 2019

'சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்ட இலக்கு’

ஆர்ச்சர்ட் ரோடு நடைபாதையில் மஞ்சள் சட்டை அணிந்த சிறுவன் மீது மின்-ஸ்கூட்டர் இடித்துவிட்டது. இதனால் சிறுவனின் தந்தை ஆத்திரமடைந்தார். படம்: ஃபேஸ்புக் (அண்டி யூவ் மாய்)

21 Apr 2019

ஆர்ச்சர்ட் ரோட்டில் சிறுவனை இடித்த மின்-ஸ்கூட்டர்; வாக்குவாதம், விசாரணை 

மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து பெண் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படம்: வாசகர்

21 Apr 2019

நான்கு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி; பெண் கைது