கனமழை, பலத்த காற்று - சாலையில் விழுந்த மூன்று மரங்கள்

அப்பர் தாம்சன் ரோட்டில் நேற்று பிற்பகல் கனமழை பெய்ததைத் தொடர்ந்து பல்வேறு மரங்கள் விழுந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தின.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 17) பிற்பகல் சுமார் 4.45 மணிக்கு, குறைந்தது ஒரு மரம் கார் ஒன்றின் மீது விழுந்ததாக அதனை நேரில் கண்ட ஒருவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார். அந்நேரத்தில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈசூனை நோக்கிச் செல்லும் சாலையில் விழுந்துகிடந்த ஒரு மரம், சாலையின் மூன்று தடங்களில் இரண்டை இடைமறித்ததால் போக்குவரத்து பாதிப்படைந்ததாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. அந்தச் சாலையில் அந்நாளில் குறைந்தது மூன்று மரங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. 

பின்னர், ஊழியர்கள் சாலையைச் சுத்தம் செய்து அங்கு விழுந்திருந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளிவரவில்லை. மரங்கள் எதனால் விழுந்தன என்பதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Loading...
Load next