‘சென்டர்பாயிண்ட்’ கடைத்தொகுதியில் தீச்சம்பவம்

சென்டர்பாயிண்ட் கடைத்தொகுதியில் நேற்று முன்தினம் இரவில் தீச்சம்பவம் நிகழ்ந்தது. 

உதவிக்கான அழைப்பு இரவு 10.30 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இத்தாலிய காலணி நிறுவனம் ‘ஜியோக்ஸ்’-ன் கடையில் தீ மூண்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்தது. சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை.

தீச்சம்பவத்திற்கான காரணம் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. ஆயினும், மின்கம்பிகளில் ஏற்பட்ட கோளாறால் தீ மூண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.