இனிப்புப் பான விற்பனையைக் கட்டுப்படுத்தும் தொடக்கப்பள்ளிகள்

இளம் வயதினருக்கு நல்ல உணவு பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கப்பூர் தொடக்கப்பள்ளிகள் பல்வேறு முயற்சிகளை முன்கூட்டியே தொடங்கியுள்ளன. அவற்றில் சில, தங்களது சிற்றுண்டிச் சாலைகளில் இனிப்புப் பானங்களின் விற்பனையை நிறுத்தியுள்ளன. குறைந்தது மூன்று தொடக்கப்பள்ளிகள், தங்களது சிற்றுண்டிச் சாலைகளிலிருந்த பானம் விற்கும் கடையையே அகற்றியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது. வேறு சில பள்ளிகள், குறிப்பிட்ட பானங்களைத் தடை செய்திருக்கின்றன.

அண்மை ஆண்டுகளில் பள்ளிகளில் இனிப்புப் பானங்களின் விற்பனை தொடர்புடைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் இவற்றுக்கும் மேலாகத் தொடக்கப்பள்ளிகள் முயற்சிகளை எடுத்து வருவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' கூறுகிறது. உதாரணத்திற்கு, ஜூரோங் வெஸ்ட் தொடக்கப்பள்ளியில் மே 2017ஆம் ஆண்டில் இருந்து எந்த பானக் கடையும் செயல்பாட்டில் இல்லை. அந்தப் பள்ளியின் மாணவர்கள் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வர் என்று அதன் துணை முதல்வர் திரு லிம் சின் குவான் தெரிவித்தார்.

இந்தப் பள்ளியைப் போல் ரிவர்சைட் தொடக்கப்பள்ளியில் 2013ஆம் ஆண்டில் இருந்து பானக் கடை செயல்படவில்லை. இனிப்புப் பானங்களை விநியோகிக்கும் எந்த இயந்திரமும் அங்கு இல்லை. 2017ஆம் ஆண்டிலிருந்து 'பள்ளிகளில் சத்துள்ள உணவுத்திட்டம்' என்ற திட்டத்தைப் பெரும்பாலான பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. சுகாதார மேம்பாட்டு வாரியம் தொடங்கிய இத்திட்டம், இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமாகச் சாப்பிடும் வழக்கத்தை மாணவர்களிடத்தில் ஊக்குவிக்கிறது. இனிப்புப் பானங்களுக்குப் பதிலாகப் பிள்ளைகளை அதிக தண்ணீர் குடிக்க வைப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

விளையாட்டாளர்கள் பருகும் சக்தியளிக்கும் பானங்களிலும் இந்தத் திட்டம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஒவ்வொரு 100 மில்லிலிட்டரில் 6 கிராமுக்கு அதிகமான சீனி இருக்கக்கூடாது என்பது திட்டத்தின் விதிமுறைகளில் ஒன்று. இளம் வயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளும் சிறார்கள், பெரியவர்கள் ஆன பிறகும் அதனைத் தொடர்ந்து கட்டிக்காப்பர் என்று 'ஈட் ரைட்' சத்துணவு ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் திரு டெர்ரிக் ஓங் தெரிவித்துள்ளார். அதனால் நீழிரிவு, மாரடைப்பு போன்ற நாட்பட்ட நோய்களால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறையும் என்றும் அவர் சொன்னார். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, பிள்ளைகள் உட்கொள்ளும் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்த பெற்றோருக்கு ஊக்கம் கொடுக்கப்படவேண்டும் என சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆன்ட்ரூ யீ தெரிவித்தார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!