வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்

உட்லண்ட்ஸ் அவென்யூ 9, ரிவர்சைட் ரோடு ஆகியவற்றுக்கு இடையேயான சாலை சந்திப்பில் நேற்று அதிகாலை 12.15 மணி அளவில் மின்-ஸ்கூட்டர், வேன் மோதிய விபத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 20 வயது இளம் பெண் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சுய நினைவுடன் இருந்த அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

ரிவர்சைட் ரோட்டுக்குச் செல் வதற்காக வலப்புறம் திரும்பிய வேன், மின்-ஸ்கூட்டர் மீது மோதி யதாக ‌ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்தது.

மோதிய வேகத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் வேனின் கீழே சிக்கிக்கொண்டார். வேன் ஓட்டுநர் உட்பட சுமார் 8 பேர் சேர்ந்து அந்த வேனை தூக்கி பெண்ணை அங்கிருந்து விடுவித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த 68 வயது டாக்சி ஓட்டுநரான திரு சென் குறிப் பிட்டார். விசாரணை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்
ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

ஜூரோங் வெஸ்ட் நிலையத்தின் மாதிரி படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

09 Dec 2019

ஜூரோங் வட்டார ரயில் பாதையில் இரு நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்

உதவித் தொகை பெற்ற பிள்ளைகளுடன் துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

1,600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி

நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து வலம்) ஸ்டெஃபன் இங், யாஸ்மின் பஷீர், புத்தகத்தைப் புனைந்த ஆலன் ஜான், புத்தகத்தில் உள்ள படங்களை வரைந்த குவேக் ஹோங் ஷின், மோகன் பொன்னிச்சாமி.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

09 Dec 2019

இனுக்காவைப் பற்றிய நூல் ஆகச் சிறந்த நூலாக அறிவிப்பு