வரவு செலவுத் திட்டம் 2019 - முக்கிய அம்சங்கள்

சிங்கப்பூரைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்திருப்பது, துடிப்புமிக்க, புத்தாக்கமிக்க பொருளியல், பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம், சிங்கப்பூரை ஓர் உலக நகராக, அனைவருக்குமான இல்லமாக ஆக்குவது, நீடித்து நிலைக்கும் நிதிவளம் ஆகிய ஐந்து கருப்பொருள்களை மையமாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட அறிக் கையை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சில பின்வருமாறு: 

 1. இருநூற்றாண்டு நிறைவு போனசாக $1.1 பில்லியன்  ஒதுக்கீடு; 1.4 மில்லியன் சிங்கப்பூரர்கள் பயன்பெறுவர்.
 2. 1950களில் பிறந்த கிட்டத்தட்ட 500,000 சிங்கப்பூரர்களுக்காக $6.1 பில்லியன் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம்.
 3. எல்லா சிங்கப்பூரர்களுக்கும் 50% வருமான வரிக்கழிவு (அதிகபட்சம் $200).
 4. நிறுவனங்களும் தொழில்துறைகளும் வலுவான ஆற்றல்களை வளர்க்க உதவியாக ‘ஸ்கேல் அப் எஸ்ஜி’ திட்டம்.
 5. சேவைத் துறையில் வெளிநாட்டு ஊழியர் விகிதம் குறைப்பு.
 6. ‘சாஸ்’ எனும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின்கீழ் மானியங்கள் அதிகரிப்பு.
 7. கேர்‌ஷீல்டு லைஃப், எல்டர்ஃபண்ட் போன்ற நீண்டகாலப் பராமரிப்புக்குக் கைகொடுக்க $5.1 பில்லியன் ஒதுக்கீடு.
 8. ஒன்றரை முதல் மூன்றரை மாத காலத்திற்கான சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி.
 9. விமானப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வாங்கிவரும் பொருட்களுக்கான பொருள், சேவை வரிக்கழிவு குறைப்பு.
 10. டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு 20 காசுகளாக அதிகரிப்பு.
 11. வேலைநலன் துணை வருமானத் திட்டத்தின்மூலம் குறைந்த வருமான, முதிய ஊழியர்களுக்குக் கூடுதல் உதவி.

மேல் விவரங்கள், இன்றைய (19 பிப்ரவரி) தமிழ் முரசு இதழில்!

Loading...
Load next