2021 - 2025 இடையே பொருள் சேவை வரி 2% உயர்வு

'ஜிஎஸ்டி' எனப்படும் பொருள் சேவை வரி, 2021 முதல் 2025 இடையில் 2% உயர்த்தப்படும். சுகாதாரப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் செலவினம் அதிகரித்து இருக்கிறது. 

வரும் ஆண்டுகளில் அது இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்பெறுகிறது. சிங்கப்பூரில் இப்போது ஜிஎஸ்டி வரி 7% ஆக இருக்கிறது. 

நாட்டின் பொருளியல் நிலவரம், நாட்டின் செலவினம், நடப்பு வரி நிலவரம் ஆகிய மூன்று அம்சங்களை வைத்து ஜிஎஸ்டி எப்போது உயரும் எனத் தீர்மானிக்கப்படும். ஜிஎஸ்டி வரி உயர்வு அவசியமானது என்று விளக்கிய நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், 2% ஜிஎஸ்டி உயர்வினால் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 0.7% வருமானம் அரசாங்கத்திற்கு ஓராண்டில் கிடைக்கும் என்றார்.