உட்லண்ட்ஸ் அவென்யூ 9, ரிவர்சைட் ரோடு ஆகியவற்றுக்கு இடையேயான சாலை சந்திப்பில் நேற்று அதிகாலை 12.15 மணி அளவில் மின்-ஸ்கூட்டருடன் வேன் மோதிய விபத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 20 வயது இளம் பெண் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். சுய நினைவுடன் இருந்த அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்குக் கொண்டு செல் லப்பட்டதாகக் கூறப்பட்டது. ரிவர்சைட் ரோட்டுக்குச் செல்வதற்காக வலப்புறம் திரும்பிய வேன், மின்-ஸ்கூட்டர் மீது மோதியதாக ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்தது. மோதிய வேகத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். வேன் ஓட்டுநர் உட்பட சுமார் 8 பேர் சேர்ந்து அந்த வேனை தூக்கி பெண்ணை அங்கிருந்து விடுவித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த 68 வயது டாக்சி ஓட்டுநரான திரு சென் குறிப் பிட்டார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
உட்லண்ட்ஸ் விபத்து: வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்
1 mins read
வேன் ஓட்டுநர் உள்ளிட்ட மூவர் சேர்ந்து வேனுக்கு அடியில் சிக்கியிருக்கும் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் -

