இன்வின்சிபல்: சிங்கப்பூரின் புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்

சிங்கப்பூரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள 218SG ரக நீர் மூழ்கிக் கப்பல் 2021ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வழங்கப்படுவதற்கு முன்னதாக ஜெர்மனியின் கடல் பகுதியில் சோதிக்கப்படும். சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஓய்வளிக்கும் நோக்கில் 218SG ரக கப்பல்கள் நான்கு வாங்கப்பட்டுள்ளன. அவற்றில் இது முதல் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்