‘விபத்தில் பாதத்தை இழந்த பெண் மீண்டு வர உறுதி’

பொங்கோல் வட்டாரத்தில் இம்மாதத்தின் முற்பகுதியில் நேர்ந்த வாகன விபத்தில் காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண் தனது இடது பாதத்தை இழந்தார். அவரது வலது பாதத்தைத் தக்கவைத்துக்கொள்ள பல அறுவைசிகிச்சைகள் செய்யப்பட வேண்டி இருந்தது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க திருவாட்டி எலிஸ் ஹீ, தமது கணவர், மகள் ஆகியோருடன் இம்மாதம் 3ஆம் தேதி காலை  ‘சர்ச் ஆஃப் தி டிரான்ஸ் பிகரேஷன்’ தேவாலயத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நேர்ந்தது.

பாசிர் ரிஸ் - போங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுன் சூலிங் கடந்த வியாழக்கிழமை காலை திருவாட்டி ஹீயை மருத்துவமனையில் சந்தித்தார்.  திருவாட்டி ஹீ வலியுடன் இருப்பதாக அவரது கணவர் தெரிவித்ததை திருவாட்டி சுன் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.