சுடச் சுடச் செய்திகள்

நால்வரை பலிகொண்ட கேலாங் தீ விபத்து: மூவருக்குச் சிறை

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் கேலாங்கில் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் தடுப்புகளைப் பயன்படுத்தி சட்ட விரோத ஊழியர் தங்கும் விடுதி நடத்திய அந்தக் குடியிருப்பின் உரிமையாளர் சியாங் டெக் ஃபங், 60, என்பவருக்கு 10 மாத சிறைத் தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அந்த நெரிசலான இடத்தில் மூண்ட தீயில் சிக்கி நான்கு மலேசிய  ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
இந்த வழக்கில் தொடர்புடைய கா டீ மெங், 54, ஓங் கா சிம், 67 ஆகிய இருவருக்கும் தலா 13 மாத சிறைத் தண்டனையும் $60,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 4ஆம் தேதி அவர்கள் தண்டனையைத் தொடங்குவர்.