எண்ணெய்சாரா பொருட்களின் ஏற்றுமதியில் கிடுகிடு வீழ்ச்சி

சிங்கப்பூரின் வர்த்தகத் துறை இவ்வாண்டை சற்று சுணக்கத் துடன் தொடங்கியுள்ளது. எண் ணெய்சாரா பொருட்களின் உள் நாட்டு ஏற்றுமதி கடந்த ஆண் டுடன் ஒப்பிடுகையில் 10.1% குறைந்துள்ளது. 
இது எதிர்பார்த்ததைவிட அதிகமான வீழ்ச்சியாகும். 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி 12% சரிந்தது. கடந்த ஈராண்டுகளில் அதற்கு அடுத்தபடியாக, ஏற்பட்டுள்ள ஆகப் பெரிய சரிவு இது. 
கடந்த ஆண்டு ஜனவரி மாதத் தில் ஏற்றுமதி 13% அதிகரித்ததை அடுத்து, புளூம்பெர்க் ஆய்வாளர் கள் 3.5% வரை சரிவு ஏற்படக் கூடும் என்று கணித்திருந்தனர்.
‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் 2.8%, டிசம்பரில் 8.5% என ஆண்டு அடிப்படையில் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஏற்றுமதி குறைந்துள்ளது.