ஐஎம்டிஏவின் கணினிகளைத் திருடியவருக்கு ஈராண்டு சிறை

வீடு புகுந்து கொள்ளையடித்ததற் கான குற்றச்செயலின் தொடர்பில் பிணையில் இருந்த மலேசியரான சோ ஜுன் ஷெங், என்சிஎஸ் எனும் தகவல் தொழில்நுட்ப நிறு வனத்தில் கணினிப் பொறியா ளராகப் பணியில் சேர்ந்தார். 
தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் கணி னிகளை நிர்வகிப்பதுடன் அதன் ஊழியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது போன்ற பணிகள் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன. 
பாசிர் பஞ்சாங் ரோட்டில் இருக்கும் ஆணைய அலுவலகத் தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் ஆணையத்திற்குச் சொந்த மான 80 மின்னேற்றி சாதனங்கள், 30 மடிக்கணினிகள், ஆறு ‘ஐபேட்’கள் என $62,000 மதிப் பிலான பொருட்களைத் திருடினார். ‘கேரொசெல்’ இணையப்பக்கத் தின் வழியாக விற்கும் நோக்கில் கணினிகளை ‘ஃபார்மெட்’ செய்து வின்டோஸ் 10 இயங்குதளத்தை அவற்றில் ஏற்றினார் அவர்.