சிறிய ரகப் பேருந்தால் அடிப்பட்ட வெளிநாட்டு ஊழியர்; ஓட்டுநர் கைது

உட்லண்ட்ஸ் ரோட்டை நோக்கிச் செல்லும் மண்டாய் ரோட்டில் வெளிநாட்டு ஊழியர் ஒருவரை சிறிய ரகப் பேருந்து மோதியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
 
உதவிக்கான அழைப்பு நேற்று (திங்கட்கிழமை 18ஆம் தேதி) காலை 8.52 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். அடிப்பட்ட அந்த 46 வயது பாதசாரி சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

உரிமையாளரின் அனுமதியின்றி வாகனத்தை ஓட்டியதன்பேரில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர். அந்த ஆடவரிடம் ஆதாரபூர்வமான வாகன உரிமம் இல்லை என்றும் கூறப்படுகிறது.