அமைச்சர் ஓங்: மாணவர் தரம் பிரிப்பில் பலனும் பின்னடைவும்

பள்ளிகளில் மாணவர்களைக் கல்வித் திறனுக்கேற்ப தரம் பிரிப்பதால் மேம்பட்ட கல்வி நிலையை எட்ட முடிகிறது. இருந் தாலும், இந்த நடைமுறையால் வழக்கநிலைப் பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களில் சிலர் தன்னம்பிக்கையை இழக்கக் கூடும் என்பதை கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஏற்றுக் கொண்டார்.
“மாணவர்களின் வேறுபட்ட கல்வித் திறனுக்கேற்ப கற்பித்தல் முறையை வழங்க கல்வி அமைச்சு 1980ஆம் ஆண்டில் தரம் பிரித்தலை அறிமுகப்படுத் தியது,” என்றார் அவர்.
நீ சூன் குழுத்தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு தாம் நேற்று முன் தினம் அளித்த எழுத்துபூர்வ பதிலில் இதனைக் குறிப்பிட்டார்.
உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்களைக் கல்வித் திற னுக்கேற்ப தரம் பிரிப்பதால் அவர்களது தன்னம்பிக்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்துள்ளதா என்று திரு இங் கேட்டிருந்தார்.
“மாணவர்களைத் தரம் பிரிப்ப தால்  அவர்கள் பள்ளியைவிட்டு நிற்கும் விகிதம் குறைக்கப்படு வதோடு மேம்பட்ட கல்வி நிலை யையும் அடைய முடிகிறது,” என்றார் அமைச்சர் ஓங்.