காற்பந்து விளையாட்டில்  கைகலப்பு; இருவர் காயம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த காற்பந்து விளையாட்டில் வீரர் களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் இருவர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த இரு வீரர் களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காற்பந்து வீரர்களில் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிய அதிர்ச் சியில் விழுந்து கிடப்பதையும் மற்ற வீரர்கள் சத்தம் போட்டு கைகலப்பில் ஈடுபடுவதையும் காணொளி ஒன்று காட்டியது.
வீரர்கள் ஒருவரை ஒருவர் தள்ளியும் சவால்விட்டும் மோச மான வார்த்தைகளைப் பிரயோ கித்தும் கைகலப்பில் ஈடுபடு வதை 19 வினாடி காணொ ளியில் காண முடிந்தது.
தலையில் முட்டியதால்தான் காயம் ஏற்பட்டது என்று வீரர் களில் சிலர் வாதிட்டனர். இதன் உச்சகட்டமாக வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
தெம்பனிசில் உள்ள ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப்பள்ளி திடலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இந்தச் சச்சரவு நடைபெற்றது.
இரு அணிகளிலும் சிங்கப் பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் சீன நாட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர்.
சேனல் நியூஸ் ஏ‌ஷியாவிடம் பேசிய காற்பந்து விளையாட்டின் நடுவர், வீரர் ஒருவர் மேலே எழும்பி பந்தை அடிக்க முயற்சி செய்ததால் சண்டை மூண்டது என்றார்.
காவல்துறை பேச்சாளர் ஒருவர், இந்தச் சண்டை குறித்து மாலை ஐந்து மணி அளவில் தகவல் கிடைத்தது என்று கூறினார். 
இந்த கைகலப்பில் காயம் அடைந்த 34, 39 வயதில் இருந்த இருவர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 34 வயதில் இருந்தவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்றும் 39 வயதில் இருந்த வர் சீன நாட்டவர் என்றும் ‘த நியூபேப்பர்’ மூலம் அறியப்படுகிறது. 
போலிசார் விசாரணை தொடர்கிறது.

Loading...
Load next