எஸ்ஐஏ: விமானங்களில்  உள்ள கேமராவை பயன்படுத்த மாட்டோம்

தேசிய விமான நிறுவனமான எஸ்ஐஏ, அதன் சில விமானங் களில் பொருத்தப்பட்டுள்ள பொழுதுபோக்கு சாதனங்களில் உள்ள கேமராக்கள் பயன் பாட்டில் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியது.
விமானத்தில் உள்ள மின் திரைகளில் திரைப்படங் களைப் பார்த்துக்கொண்டிருந்த போது தாங்கள் கண்காணிக் கப்பட்டதுபோன்ற உணர்வு ஏற் பட்டதாக சில வாடிக்கை யாளர்கள் புகார் கூறியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த எஸ்ஐஏ,  கேமராக்கள் பயன் பாட்டில் இல்லை என்று தெரி வித்தது.
இது பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு விளக்கம் அளித்த எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர், “இவ்வாண்டு பிற்பகுதியில் தருவிக்கப்பட்ட நடுத்தரத் தொலைவு ‘ஏர்பஸ் 350’ விமானங்களில் அத்தகைய பொழுதுபோக்கு சாதனம் பொருத்தப்பட்டு இருந்தது,” என்றார்.
“இருந்தாலும் கேமரா நிரந்தர மாகச் செயலிழக்கப்பட்டது. கேம ராவை மீண்டும் செயல்படுத்த முடியாது,” என்றும் அவர் சொன் னார். இனிமேலும் கேமராவைப் பயன்படுத்தும் எண்ணமில்லை. அத்தகைய அம்சங்களை புகுத் தும் திட்டமும் இல்லை என்றார் அவர்.
அந்த ‘AVANT’ உள்விமான பொழுதுபோக்கு முறையை ஃபிரெஞ்ச் நிறுவனமான தாலஸ் உருவாக்கியிருந்தது. 
அத்தகைய பொழுதுபோக்கு சாதனங்கள் முக்கிய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான 1,600க்கும் மேற்பட்ட விமானங்களில் பொருத்தப்பட்டது என்று தாலசின் இணையப்பக்கம் தெரிவிக்கிறது.