கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜோகூரில் பல தொழில்களில் ஈடுபட்டவர்

சிங்கப்பூரில் உள்நாட்டு பாது காப்புச் சட்டத்தின் கீழ் அண்மை யில் தடுத்து வைக்கப்பட்ட சிங்கப்பூரர்களில் ஒருவரான முகம்மது கசாலி சாலே, ஜோகூர் பாருவில்  பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.உடற்பிடிப்பு நிலையங்கள் முதல் உணவகங்கள் வரையிலான தொழில்களில் அவர் ஈடுபட்டார் என்று  தகவல்கள் தெரிவிக் கின்றன.

சிங்கப்பூரிலிருந்து பழைய கார்களையும் இந்தோனீசியா, மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகங்களில் அவர் ஈடுபட்ட தாகவும் நம்பப்படுகிறது.
இந்த நிலையில் இத்தகைய வர்த்தகங்கள், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக மேற்கொள்ளப் பட்டதா என்ற கோணத்தில் அதி காரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அந்தத் தகவல் குறிப்பிட்டது.புக்கிட் அமான் சிறப்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்த ஆறு போராளிகளில் முகம்மது கசாலியும் ஒருவர்.கடந்த டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை களில் ஆறு பேரும் கைது செய்யப் பட்டனர்.

மலேசிய போராளிகளின் தலை வரான அகெல் சைனலுக்கு நிதி உதவிகளை செய்து அவரது உத்தரவுகளையும்  பெற்று அந்தப் போராளி செயல்பட்டதாகக் கூறப் படுகிறது.மத்திய ஜோகூர் பாருவில் உள்ள ஃபிரிமேசன் கட்டடத்தைத் தகர்ப்பது அவர்களுடைய திட்டமாக இருந்து. இதற்காக மேலும் சிலரை பயங்கரவாத அமைப்பில் சேர்க்க அந்தப் போராளி முயற்சி செய்தார் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

இந்தக் கைது நடவடிக்கைகளுடன் சேர்த்து 2013 பிப்ரவரி மாதத்திலிருந்து மொத்தம் 459 போராளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.