சிங்கப்பூரர்களைக் கவர்ந்த ‘பெரிய’ நிலா

பௌர்ணமி நாளான நேற்று நிலா பூமிக்கு அருகில் வந்து பெரிதாகவும் பிரகாசமாகவும் காட்சியளித்தது. இந்த அரிய நிகழ்வைக் காண நேற்று மாலை முதலே சிங்கப்பூரர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்தப் படம் பிடோக் படகுத்துறையில் எடுக்கப்பட்டது. அடுத்த மாதம் 21ஆம் தேதியும் சிங்கப்பூர் வானில் நிலா இப்படிப் பெரிதாகக் காட்சி தந்து பிரகாசமாக ஒளிரும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்