‘தனியார் வீட்டு விலை அதிகம் உயராது’

சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை தற்போதைக்கு அதிகம் உயராது என்று ‘கெப்பிடாலேண்ட்’ தலைமை நிர்வாக அதிகாரி ஆன்ட்ரூ லிம் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் வீட்டு விலை 5 விழுக்காடு உயர்ந்தாலே அது மிக நல்லது என்று அவர் புளூம்பர்க் செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

சிங்கப்பூர் அரசாங்கம்  கடந்த ஆண்டு சொத்துச் சந்தைமீது விதித்திருந்த கட்டுப்பாட்டின் விரிவும் கடுமையும் முதலீட்டாளர்களை வியப்படையச் செய்ததாகத் திரு லிம் சொன்னார். சொத்து விற்பனை நடவடிக்கைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் முத்திரை வரியை அதிகரித்ததுடன் கடன் நிபந்தனைகளையும் மேலும் கடுமையாக்கியது.

2018ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் தனியார் வீட்டு விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’