கட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவர் கைது

ஈசூன் ரிங் ரோட்டிலுள்ள புளோக் 111ன் ஆறாவது மாடி  கட்டட வெளிச்சுவரின் விளிம்பில் அமர்ந்திருந்த ஆடவரை போலிசார் தற்கொலை குற்றத்தின்பேரில் கைது செய்தனர். 

நேற்று முன்தினம் பிற்பகலில் அந்த 37 வயது ஆடவர் விளிம்பில் காணப்பட்டதாக அக்கம்பக்கத்தினர் போலிசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஆடவர் விளிம்பிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

குற்றச்செயல்களிலிருந்து தற்கொலையை நீக்குவதற்கான குற்றவியல் சட்டத்திருத்த மசோதா அண்மையில் முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது, தற்கொலை குற்றத்திற்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது மூன்றும் விதிக்கப்படலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்