பவுண்டரி ரோட்டில் விபத்து; காருக்கு அடியில் சிக்கிய சைக்கிளோட்டி

காருக்கு அடியில் சிக்கியிருந்த சைக்கிளோட்டி ஒருவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை காப்பாற்றினர். 

லோரோங் சுவானை நோக்கிச்செல்லும் பவுண்டரி ரோட்டில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்த தகவல் காலை 9.15 மணிக்கு கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

45 வயது ஓட்டுநரான சைக்கிளோட்டி சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

சம்பவ இடத்தில் கிட்டத்தட்ட பத்து அதிகாரிகள் காரின் பிற்பகுதியைத் தூக்கி, அதற்குக் கீழ் சிக்கியிருந்த சைக்கிளோட்டியைக் காப்பாற்றினர்.

சம்பவத்தை போலிசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.