மத்திய விரைவுச்சாலையில் தீப்பற்றிய டாக்சி

மத்திய விரைவுச்சாலையில் இன்று பிற்பகல் டாக்சி ஒன்று திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து அதன் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

ஈசூனை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் 7’ஏ’ வெளிவாயிலுக்கு முன்பு இந்தச் சம்பவம் பிற்பகல் சுமார் 2.35 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. 

ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீச்சம்பவத்திற்கான காரணத்தைத் தொடர்ந்து ஆராய்வதாக  சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.