மருத்துவருக்கு $100,000 அபராதம்; மறுஆய்வு செய்ய அமைச்சு கோரிக்கை

நோயாளிகளுக்கு வழக்கமாக போடப்படும் ஒரு ஊசிமருந்தால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து அந்த நோயாளிக்கு விளக்கமளித்ததால் மருத்துவர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட $100,000 அபராதத் தொகையை மறுஆய்வு செய்யுமாறு சுகாதார அமைச்சு மருத்துவ மன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் மருத்துவ மன்றத் தின் ஒழுங்குமுறைக் கண் காணிப்புக் குழு மிக அதிகபட்ச மான அந்தத் தொகையை அபராதமாக விதித்தது.
இது  மருத்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்குக் காரணம் பெரும்பாலான மருத்துவர்கள் அபூர்வமானதும், நாளடைவில் சரியாகி விடக்கூடி யதுமான பக்கவிளைவுகள் பற்றி நோயாளிகளிடம் வழக்கமாகக் கூறுவதில்லை.
ஒழுங்குமுறைக் கண் காணிப்புக் குழுவின் தீர்ப்பு நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தரவேண்டிய தகவல்கள் குறித்து ஒரு தவறான முன்னு தாரணத்தை ஏற்படுத்திவிடும் என்பது அவர்களது கவலை.
மேலும், இது குறித்து பல மருத்துவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிலும் தங் களது கருத்துகளை வாசகர் கடிதம் பகுதியில் தெரிவித்திருந் தனர். 
அதில் பாரசிடமோல் எனப் படும் சாதாரணமாக காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்துக்குக்கூட பக்கவிளைவுகள் உண்டு என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன் தொடர்பில் 5,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முறையீட்டு மனு ஒன்றில் கையெழுத்திட்டு தங்கள் கவலையை சுகாதார அமைச்சர் கான் கிம் யோங்கிடம் பகிர்ந்து கொண்டனர்.