உரிமமின்றி கடன் வழங்கும் தொழில் செய்தவருக்கு சிறை, அபராதம்

உரிமமின்றி கடன் வழங்கும் தொழில் செய்தவருக்கு சிறை, அபராதம்

1 mins read

உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாகக் கடன்வழங்கும் தொழிலில் ஈடுபட்ட முன்னாள் கட்டுமானத் துறை நில அளவீட்டாளருக்கு நேற்று மூன்றரை ஆண்டுகள் சிறையும் $450,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை 2006ஆம் ஆண்டிலிருந்து செய்துவந்த மலேசிய நாட்டவரான 47 வயது லூய் டெக் ஹோக் 2017ல் பிடிபட்டார். அப்போது ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் மற்றவர்களின் நான்கு வங்கி அட்டைகளை வைத்திருந்திருந்தை அதிகாரிகள் ஆராய்ந்தபோது அவர் கைதுசெய்யப்பட்டார். குறைந்தது 83 பேருக்கு22 தடவைகள் உரிமம் இல்லாமல் கடன்வழங்கும் தொழில் செய்ததன் பேரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சிங்கப்பூர் நிரந்தரவாசியான லூய் கட்டுமானத் துறையில் பணி புரிந்தபோது 2006ல் சட்ட விரோதமாகக் கடன்வழங்கத் தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தியா, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, 10% வரை மாத வட்டியில் கடன் வழங் கியுள்ளார். கடன்வாங்கியவர் களிடம் ஏடிஎம் அட்டைகளையும் அவற்றின் மறைச்சொற்களையும் கடனாளி களிடம் வாங்கிவிடும் அவர், அவர்களுக்கு சம்பளம் வந்ததும் தமது கடன்தொகையை அவர்கள் கணக்கிலிருந்து எடுத் துக்கொண்டு மீதிச் சம்பளத்தை அவர்களிடம் கொடுப்பார்.