மூதாட்டியிடம் $125,000 ஏமாற்றியவருக்கு சிறை

மூதாட்டியின் பரிவு குணத்தைப் பயன்படுத்தி $125,000 ஏமாற்றிய 46 வயது சின் கோ கின் என்ற மலேசிய நாட்ட வருக்கு நேற்று இரண்டு ஆண்டு, 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. $105,000 அடங்கிய மூன்று ஏமாற்றுக் குற்றங்களை நீதிமன்றத்தில் சின் ஒப்புக்கொண்டார். 
ரிசார்ட் வேர்ல்ட் செந்தோசாவில் அடிக்கடி சூதாடும் 71 வயது திருவாட்டி டியோ சூ லின்னை சின் கடந்த ஆண்டு சந்தித்தார். இருவரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அங்கு செல்வார்கள். 
கடந்த ஏப்ரல் மாதம் திருவாட்டி டியோவிடம் சின் ஐந்து ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை கொடுத்து, இந்தோனீசியர் ஒருவர் அவற்றை வாங்கவுள்ளார் என்றும் அவற்றைப் பத்திரமாக வைத்திருக்கும்படியும் சொன்னார். 
அதற்குப் பதிலாக $50,000யை திருவாட்டி டியோவிடமிருந்து வாங்கினார். ஆனால், அவை போலி கைக்கடிகாரங்கள். இந்தோனீசிய வாடிக்கையாளும் இல்லை.