கள்ளத்தனமாக கடல் எரிசக்தி எண்ணெய் பரிமாற்றம்: 11 பேர் கைது

சட்டவிரோத கடல் எரிசக்தி எண்ணெய் பரிமாற்றம் தொடர்பாக 22 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஜூரோங் தீவு கடற்பகுதியில் அவர்கள் கரையோர காவல்  படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கடற்துறை சேவை வழங்கும் ஒரு படகில் அறுவர் கைதுசெய்யப்பட்டனர். 

இரண்டு மெட்ரிக் டன் கடல் எரிசக்தி எண்ணெய்யை திருடியதாக நம்பப்படும் இவர்கள் மீது இன்று நம்பிக்கை மோசடி குற்றம் சாட்டப்படும். இயந்திரப் படகு மாலுமிகளான மற்ற ஐவர் மீது திருட்டுப் பொருளை வாங்கியதற்காக இன்று குற்றம் சாட்டப்படும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி