ரொட்டிக்குள் கள்ளச் சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற ஆடவர்

தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் கொண்டுவர முயன்ற 38 வயது ஆடவர் ஒருவர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கடந்த சனிக்கிழமை (பிப்ரவர் 16ஆம் தேதி) பிடிபட்டார். அந்த ஆடவர் ஐந்து சிகரெட் பெட்டிகளை ரொட்டித் துண்டுக்குள் பதுக்கி தனது மோட்டர் சைக்கிளின் கூடைக்குள் வைத்திருந்ததைக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் கண்டனர்.  

மேல் விசாரணைக்காக இந்த வழக்கு சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரின் பாதுகாப்பைக் கட்டிக்காக்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கப்படுவதாக ஆணையம் கூறியது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்