போதையில் வாகனம் ஓட்டி நிகழ்ந்த விபத்துகள் அதிகம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகள் சென்ற ஆண்டில் அதிகரித்தன. சிவப்பு விளக்கை மீறிச் சென்றது, மற்றும் சாலை விபத்துகளும் சென்ற ஆண்டு கூடியதாக போக்குவரத்து போலிஸ் வெளி யிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. 
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் சென்ற ஆண்டில் 176 விபத்துகள் நிகழ்ந்தன. 
2017ல் இந்த விபத்துகளின் எண்ணிக்கை 150 ஆக இருந் தது. குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்துகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 59ஆகக் கூடியது. இது 2017ல் 39 ஆக இருந்தது.
இருந்தாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பிடிபட்டவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 3.7% குறைந்து 2,002 பேராக இருந்தது. 
சிவப்பு விளக்கை மீறிச் சென்றது போன்ற குற்றச்செயல் களின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 15.7% அதிகரித்து 53,910 ஆக இருந்தது. சிவப்பு விளக்கை மீறிச் சென்றதால் ஏற்பட்ட விபத்துகள் 2.6% அதிகரித்து 120 ஆயின. 
மோட்டார்சைக்கிள்கள் சம்பந் தப்பட்ட விபத்துகள் கவலை தருவதாக இருக்கிறது. 
மோட்டார் சைக்கிளோட்டிகள் தொடர்பான உயிர்பலி விபத்து கள் சென்ற ஆண்டு 65 ஆக அதிகரித்தன. இந்த விபத்துகள் 2017ல் 45ஆக இருந்தன. 
மொத்தத்தில் சாலைப் போக்குவரத்து உயிர்பலி விகிதம் 100,000 பேருக்கு 2.16 ஆக இருந்தது. 
இது சென்ற ஆண்டு 2.2 ஆக கொஞ்சம் அதிகரித்தது. இந்த விகிதாச்சாரம் 2010லிருந்து படிப்படியாகக் குறைந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
சென்ற ஆண்டு நிகழ்ந்த உயிர்பலி விபத்துகளின் எண் ணிக்கையும் ஏற்பட்ட உயிர்பலி களும் முறையே 2.6% மற்றும் 2.5% கூடின. 
இருந்தாலும் காயங்களை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கை 0.5% குறைந்து சென்ற ஆண்டு 7,690 ஆக இருந்தது. 
அதேபோல அனுமதிக்கப் பட்ட அளவைவிட வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்துகளின் எண் ணிக்கையும் 5.6% குறைந்து 716 ஆக இருந்தது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்