பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினால் கடும் தண்டனை விதிக்க புதிய ஏற்பாடு

ஆபத்தான முறையில் வாகனங் களை ஓட்டிச் செல்வது, அலட்சிய மாக வாகனத்தை ஓட்டிச் செல்வது ஆகிய இரு செயல்களும் புதிய இரண்டு பிரிவுகளில் சாலைப் போக்குவரத்துக் குற்றங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. 
சாலைகளில் வாகன ஓட்டுநர் கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக் கத்தில் இந்த நடவடிக்கை இடம் பெறுவதாக  உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் நேற்று தெரி வித்தது. 
கடுமையான போக்குவரத்துக் குற்றச்செயல்களுக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்பது அமைச்சின் திட்டம். 
அதனையொட்டி இந்த ஏற்பாடு இடம்பெறுகிறது. 
இந்தக் குற்றங்களுக்குத் தண்டனையையும் அபராதத்தையும் அமைச்சு அதிகப்படுத்தப்போவ தாக தெரிவித்து இருக்கிறது. 
வாகனத்தை ஓட்டி வந்த பாணி யின் அடிப்படையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதும் அலட்சியமாக வாகனம் ஓட்டு வதும் வேறுபடுத்திப் பார்க்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
அதாவது வாகன ஓட்டுநர் அளவுக்கு அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டி வந்திருக்கி றாரா அல்லது இதர வாகனங்களை இடிப்பதுபோல்  வாகனத்தை ஓட்டி வந்திருக்கிறாரா என்பது போன்ற அம்சங்கள் இதில் கருத்தில் கொள்ளப்படும்.