ரொட்டிக்குள் கள்ள சிகரெட்

ரொட்டி துண்டுக்குள் சிகரெட்டை மறைத்து வைத்து கடத்த முயன்ற ஆடவரின் முயற்சி தோல்வி அடைந்தது. அந்த 38 வயது மோட்டார் சைக்கிளோட்டி கடந்த சனிக்கிழமை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார். 
அந்த மலேசியர் ஐந்து சிகரெட் பொட்டலங்களை ரொட்டிக்குள் மறைத்து வைத்து அதை தனது மோட்டார் சைக்கிளில் வைத் திருந்ததாக குடிநுழைவு சோத னைச்சாவடி ஆணையம் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. அவருடைய சட்டைப் பையிலும் ஒரு கள்ளசிகரெட் இருந்தது.
மோட்டார்சைக்கிள் தலைக்கவசத்தில் வேறு ஒரு சிகரெட் பொட்டலத்தையும் அவர் வைத்திருந்தார். மேல் விசாரணைக்காக இந்த விவகாரம் சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டு உள்ளது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜாலான் புரோவில் அண்மையில் நிகழ்ந்த மாபெரும் எரிவாயுத் தோம்பு தீச்சம்பவத்தை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் ஒருங்கிணைப்புத் தளபதிகளாகச் செயல்பட்ட கேப்டன் தினேஷ் வெள்ளைச்சாமி (இடது), மேஜர் நவின் பாலகிருஸ்னன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

25 Jun 2019

சவால்மிக்க பணியைத் திறம்பட கையாண்ட தீயணைப்பு வீரர்கள்