துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்களுக்கு அதிக பாதுகாப்பு 

துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய மணமாகாத ஜோடிகள் உட்பட எல்லாருக்கும் இப்போது இருப் பதைவிட இன்னும் வலுவான பாதுகாப்பு விரைவில் கிடைக்கும். 
தங்களை அலைக்கழிக்கும் ஆசாமிகளிடமிருந்து அவர்கள் எளிதாக பாதுகாப்பை நாடலாம். அதேவேளையில், குற்றவாளிகள் உடனடியாகக் கைதுசெய்யப்படக் கூடிய நிலையை எதிர்நோக்குவர். 
நீதிமன்ற உத்தரவுகளை மீறு வோருக்கு இப்போது இருப்பதை விட இன்னும் கடுமையான தண் டனைகள் கிடைக்க உள்ளன. 
துன்புறுத்தலுக்கு ஆளாவோ ருக்குக் கிடைக்கக்கூடிய  பாது காப்பு உத்தரவுகளின் அதிகாரம், அத்தகைய அப்பாவிகளின் குடும் பத்தாருக்கும் நண்பர்களுக்கும் நீட்டிக்கப்படும். 
இவை எல்லாம் துன்புறுத்தல் பாதுகாப்புச் சட்டத்திற்கான (Poha) உத்தேச முக்கிய மாற்றங் கள் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் நேற்று அறிவித்தார்.
குடும்ப வன்செயலுக்கு எதி ரான சிறப்பு வல்லுநர் நிலையம் ஒன்றில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஊடகத்திடம் பேசிய அமைச்சர், மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.