நிறுவனத்தின் முன்னாள்  துணைத் தலைவருக்குச் சிறை

ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த ஒருவர், ஏறக்குறைய 10 ஆண்டுக் காலம் பல சாதனங்களையும் பயன்படுத்தி 11 மாதர்களின் பெயரைக் கெடுக்கும் ஆபாசப் படங்களை எடுத்தார். அந்தப் பெண்களில் அவரின் குடும்ப உறுப்பினர்களும் அவருக்குக் கீழே வேலை செய்தவர்களும் அடங்குவார்கள். அந்த 58 வயது ஆடவர், 2007 முதல் 2016 அக்டோபர் வரை இத்தகைய குற்றச்செயல்களைச் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
போலிஸ் புலன்விசாரணை தொடங்கியதுமே அந்த ஆடவருக்கு வேலை போய்விட்டது. இதில் தொடர்பு உடையவர்களின் பெயரை வெளியிட இயலாது.
குற்றவாளி, ஒரு மாதுக்கு மானபங்கம் விளைவித்ததாகக் கூறும் 28 குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு நேற்று ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.