வாடகை மின்ஸ்கூட்டர்  நிறுவனம் மீது குற்றச்சாட்டு

உரிமம் இல்லாமல், உந்து நடமாட்ட வாகனங்களை வாடகைக்குக் கொடுத்த தாக டெலிபோட் என்ற உள்ளூர் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. பொது இடங்களில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் வாடகைக்குக் கிடைத்த 68 டெலிபோட் உந்து நடமாட்ட வாகனங்களை, பிப்ரவரி 14ஆம் தேதி நிலவரப்படி தான் முடக்கி இருப்பதாக வும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
உரிமம் இல்லாமல் அல்லது முந்தைய விதிவிலக்கு எதுவுமின்றி இத்தகைய வாகனங்களை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப டெலிபோட் நிறுவனத்துக்கு எழுத்து மூலமான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. அதற்குப் பிறகே ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த ஆணையம், பிப்ரவரி 14 நிலவரப்படி, நியூரோன் மொபிலிட்டி என்ற  வேறு ஓர் உள்ளூர் நிறுவனத்தைச் சேர்ந்த இத்தகைய     131 வாகனங்களை முடக்கிவைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீதும் பின்னொரு தேதியில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.