இடுகாட்டில் ஆறு பேர் கைது

குடிநுழைவு குற்றங்களையொட்டி மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் சுவா சூ காங் இடுகாட்டில் செவ்வாய்க்கிழமை காலையில் கைதுசெய்யப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது. அவர்களுக்கு வயது 22 முதல்  42 வரை. 
தாங்கள் அந்த இடுகாட்டில் குழி தோண்டுபவர்களாக வேலை செய்து வந்ததாக அவர்கள் கூறினார்கள் என்று இந்த ஆணையம் குறிப்பிட்டது. புலன்விசாரணை தொடர்கிறது.