சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி அறப்பணிக்காக கம்போடியா சென்றார்

கம்போடியாவில் ஒருவரை மோதிவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் கம்போடிய அதி காரிகளால் தேடப்பட்டு வரும் சிங்கப்பூர் மோட்டார் சைக்கிளோட்டி அங்கு அறப்பணி பயணத்துக்காக சென்ற குழு வின் ஓர் உறுப்பினர் என்று 
தி நியூ பேப்பர் அறிகிறது.
அந்தப் பெண் மோட்டார் சைக்கிளோட்டியின் ‘BMW R1200 GS Adventure’ மோட்டார் சைக்கிள் இம்மாதம் 7ஆம் தேதியன்று 81 வயது மூதாட் டியை மோதித் தள்ளியது என்றும் அந்த மூதாட்டி அதில் மரணமடைந்தார் என்றும் அறியப்படுகிறது.
இம்மாதம் 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அறப்பணி பயணத்துக்காக நான்கு மோட்டார் சைக்கிளோட்டிகள் சிங்கப்பூரிலிருந்து கம்போடியாவுக்குப் பறப்பட்டனர்.
அங்கு அவர்கள் முதியவர்க ளுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் உதவுவதாக இருந் தது. வசதி குறைந்தவர்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் மதரசாக்களுக்கும் நிதி திரட்டு தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் ‘ஜிஃபாரி இவெண்ட் மேனேஜ்மண்ட்’ இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்து தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங். படம்: எஸ்பிஎச்

17 Jun 2019

புதிய பாணி பெருநாள் கொண்டாட்டம்

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Jun 2019

வேலை-வாழ்க்கை சமநிலை இளம் தம்பதியரின் முக்கிய பிரச்சினை